www.garudabazaar.com

நயன்தாராவின் 'நெற்றிக்கண்'.. நேரடியாக பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? உண்மை என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்' . இந்த படத்தின் ரிலீஸ் தான் தற்போது உறுதியாகியுள்ளது.

Nayanthara Netrikann Directly releasing on this OTT

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'.  இந்த படத்தினை சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து அஜ்மல் இன்னொரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

அவள் படத்துக்கு இசையமைத்த கிரிஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்கிற கேள்விகள் எழுந்து வந்தன.

கொரோனா சூழலால் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகாத நிலை உருவாகியிருப்பதால் இந்த படம் நெரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்கிற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் 'நெற்றிக்கண்' படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தற்போது தகவல்கள் தெரியவந்துள்ளன.

'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா ரஜினியுடன் 'அண்ணாத்த', விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ALSO READ: போடு வெடிய!! பிரபல ஓடிடியில் ஒளிபரப்பாகும் சிம்புவின் சமீபத்திய திரைப்படம்!

Nayanthara Netrikann Directly releasing on this OTT

People looking for online information on Ajmal Ameer, Girish Gopalakrishnan, Milind Rau, Nayanthara, Vignesh shivan will find this news story useful.