Reliable Software
www.garudabazaar.com

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் குறித்து வெளியான அடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் நெற்றிக்கண்.

nayanthara Netrikann HealingSong idhuvum kadandhu pogum update

2011-ஆம் ஆண்டு கொரியன் மொழியில் வெளியான Blind திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் திரைப்படமாக உருவாகும் நெற்றிக்கண் படத்தில் தான் நயன்தாரா பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.

பார்வை மாற்றுத்திறனாளியாக நயன்தாரா ஒரு  சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைதான் இந்தப்படம்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய மாஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடலுக்கு “இதுவும் கடந்து போகும்” என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும்,  இந்த பாடல் ஒரு ஹீலிங் செய்யும் பாடலாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் மிக விரைவில் வெளியாகப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அஜ்மல் அமீர், சரண், இந்துஜா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவனின் Rowdy Pictures மற்றும் Kross Pictures தயாரிக்கிறது. அவள் திரைப்படத்துக்கு இசையமைத்த கிரிஷ் இந்த படத்துக்கு இசையமைக்க,  RD ராஜசேகர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். நெற்றிக்கண் படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதமே வெளியானது.

மேலும் நயன்தாரா அடுத்தடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் அண்ணாத்தே படத்திலும், விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவனின் இயக்கத்திலான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.

ALSO READ: "மனசு வலியில 2 பேரும் Phone-அ தொலைச்சுட்டாங்க!".. குஷி படத்துக்கு SJ சூர்யா சொன்ன இன்னொரு க்ளைமாக்ஸ்!

மேலும் செய்திகள்

nayanthara Netrikann HealingSong idhuvum kadandhu pogum update

People looking for online information on Nayanthara, Netri Kann, Netrikann, Rowdy Pictures, Vignesh shivan will find this news story useful.