www.garudabazaar.com

"உண்ணாவிரதம் முடிஞ்சு ரஜினிக்கு ஜுஸ் கொடுத்த அந்த பொண்ணு..".. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த Throwback Photo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்த 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் நடிகை ரேகா.

special moment BiggBoss Rekha shares rajini throwback pic

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ரேகா கலந்துகொண்டது பலருக்கும் கமல் - ரேகா இணைந்து நடித்த திரைப்படங்களை குறிப்பாக புன்னகை மன்னன் படத்தை நினைவூட்டியது. பின்னர் ரேகா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உணவுகளை சமைத்தார்.

special moment BiggBoss Rekha shares rajini throwback pic

இந்நிலையில் தன் மகள் வழங்கிய ஜூஸை ரஜினி பருகியதும், மீண்டும் அந்த ஜூஸை தன் குட்டி மகளுக்கே ரஜினி கொடுப்பதுவுமான புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை ரேகா, “புகைப்படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரஜினிஃபைடு 2கே கிட்ஸ்க்கு நன்றி.

special moment BiggBoss Rekha shares rajini throwback pic

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை காவிரி பிரச்சனை சூழலில் முடித்தபோது, ​​என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் பருகினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள்.” என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் விஜய் டிவியின் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5-ஐயும், இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3-ஐயும் இப்போதே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'அம்பாசமுத்திரம் அம்பானி' ஹீரோயினுக்கு அபராதம்!.. சாதி சான்றிதழ் விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தொடர்புடைய இணைப்புகள்

special moment BiggBoss Rekha shares rajini throwback pic

People looking for online information on Rajinikanth, Rekha will find this news story useful.