www.garudabazaar.com

தனுஷின் ‘மாறன்’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கப் போகும் ஹீரோ இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் தான் ‘மாறன்’ என்கிற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

karthick naren next directs atharva கார்த்திக் நரேன் அதர்வா

தனுஷ் பிறந்த நாளன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். ரகுமான் நடிப்பில் துருவங்கள் பதினாறும் எனும் த்ரில்லர் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் மாஃபியா மற்றும் அரவிந்த் சுவாமி நடிப்பில் நரகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

இதில் அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர், பிரசன்னா நடித்த மாஃபியா திரைப்படம் ஏற்கனவே வெளியானது. தொடர்ந்து அரவிந்த் சுவாமி, பிரசன்னா நடிப்பில் ‘புரோஜக்ட் அக்னி’ திரைப்படத்தை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா ஆந்தாலஜி தொகுப்புக்காக இயக்கினார்.

இந்நிலையில் தான் இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்த திரைப்படத்தில் அதர்வாவை இயக்குவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா மூர்த்தி தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Also Read: "வாரே.. வா..".. தியேட்டரில் ரிலீஸ் .. ‘மார்வெல் ஸ்டூடியோவின்’ ஆசிய சூப்பர் ஹீரோ படம்! மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

karthick naren next directs atharva கார்த்திக் நரேன் அதர்வா

People looking for online information on Atharvaa, Dhanush, Karthick Naren will find this news story useful.