Veetla Vishesham Others Page USA

2-வது குழந்தையையும் ‘வாட்டர் பெர்த்’ முறையில் பெற்றெடுத்த நடிகர் நகுல் – சுருதி தம்பதி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வாட்டர் பர்த் பிரசவ முறை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். அதுவும் அதே வாட்டர் பர்த் முறையில் இந்த பிரசவம்  நிகழ்ந்துள்ளது.

Nakhul Sruti blessed with boy baby in water birth

Also Read | ”தனுஷும் செல்வராகவனும் சேர்ந்து நடிப்பாங்களா…” தயாரிப்பாளர் தாணு சொன்ன பதில்

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமான நகுல், பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். நடிப்பு, பாடல் என பட்டையை கிளப்பும் நகுல் தொடக்க காலத்தில் பருமனாகவும், பின்னர் தமது பருமனான உடலை குறைத்து ஃபிட்டாகவும் மாறினார் நகுல்.

இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி, அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். சமூக கருத்துக்களானாலும் சரி, தன்னை நோக்கிய கேள்விகள், விமர்சனங்கள் எதுவானாலும் சரி நேரடியாக பதில் சொல்லக் கூடியவர் ஸ்ருதி. தன் கணவர் மற்றும் முதல் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு வந்த ஸ்ருதி, அண்மையில் தமது 2வது கர்ப்பம் குறித்த தகவலையும் பகிர்ந்திருந்தார்.

Nakhul Sruti blessed with boy baby in water birth

இந்நிலையில், இரண்டாவது கர்ப்பம் தரித்த சுருதிக்கு, தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. முதல் மகளை வாட்டர் பர்த் என்கிற தண்ணீர் தொட்டி முறை பிரசவத்தில் பெற்றெடுத்த ஸ்ருதிக்கு அந்த நேரத்தில் விமர்சனங்களும், அதற்கு நிகரான ஆதரவு, ஊக்கம் மற்றும் பாராட்டுகளும் குவிந்தன.

ஆனாலும் அந்த சமயத்தில் sanctum, natural birth center என்கிற இடத்தில் தான் தன் குழந்தையை பெற்றெடுத்ததாக அப்போது குறிப்பிட்ட ஸ்ருதி, தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தேவையான மருத்துவ உதவியுடனே அப்படி செய்ததாகவும் தெளிவுபடுத்தி இருந்தார்.

Nakhul Sruti blessed with boy baby in water birth

இந்நிலையில் முதலில் பிறந்த தமது பெண் குழந்தையை பெற்றெடுத்தது போலவே, இரண்டாவதாக பிறந்துள்ள ஆண் குழந்தையையும் இப்படி வாட்டர் பர்த் முறையில் வெற்றிகரமாக பெற்றெடுத்த இந்த தம்பதியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Also Read | நயன் - விக்கி ஹனிமூனுக்காக தங்கியிருக்கும் பிரபல ஹோட்டல்.. ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?

Tags : Nakhul, Sruti

மேலும் செய்திகள்

Nakhul Sruti blessed with boy baby in water birth

People looking for online information on Nakhul, Sruti will find this news story useful.