KAAPAN USA OTHERS

காரின் மீது பாறை விழுந்ததால் பிரபல நடிகை அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மௌனி ராய். இவர் நாகினி என்கின்ற தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தமிழிலும் பிரபலமாக அறியப்படுகிறார்.

Nagini fame Mouni Roy Condemned Mumbai Metro Officials

இவர் மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது ஹஜூ என்ற எடத்தில் சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து பாறை ஒன்று காரில் விழுந்துள்ளது. இதனால் அவர் கார் கண்ணாடி சேதமைடந்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், என் காரின் மீது பாறை ஒன்று விழுந்து கார் சேதமைடைந்தது. சாலையை கடப்பவர்கள் யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் சற்று சிந்தித்து பாருங்கள். மும்பை மெட்ரோவின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு உங்களிடம் ஏதாவது ஆலோசனை உள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார்.