'ஹனுமான்' உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்த சிறுவன் Road Accident-இல் பலி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 19, 2019 01:14 PM
ஹனுமான், சங்கட் மோச்சன் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் 14 வயதான சிவ்லேக் சிங். இவர் தற்போது சாலை விபத்தில் பலியானதாக பாலிவுட் இணைய செய்தி பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து வெளியான செய்தி அந்த குறிப்பில், தனது அம்மாவுடன் வியாழக்கிழமை சட்டீஸ்கர் அருகே ராய்பூர் அருகே காரில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சிவ்லேக் சிங் மரணமடைந்துவிட்டாராம். அவரது அம்மா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளாராம். லாரி டிரைவரை கைது செய்ய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.
Tags : Shivlekh Singh, Hanuman