www.garudabazaar.com

‘சார்பட்டா பரம்பரை’ பருவதம்.. ‘இடியப்ப பரம்பரை’ தனலக்‌ஷ்மி.. ரோசமான சண்டை’ - நாகேஷ் பேசும் Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் நேரடியாக வெளியானது.

nagesh talking sarpatta parambarai in old movie viral video

பிரிட்டிஷ் காலத்தில் உருவான சார்பட்டா பரம்பரையும் இடியப்ப பரம்பரையும் 70களில் மோதிக் கொள்கின்றனர். அப்போது சார்பட்டா பரம்பரைக்காக களமிறங்கும் ஆர்யா, தன் வாத்தியார் பசுபதியின் உதவியுடன் வெற்றி பெறுகிறாரா? என்பது தான் இப்படத்தின் கதை.

nagesh talking sarpatta parambarai in old movie viral video

எழுபதுகளில் மெட்ராஸ் மாகாண குத்துச்சண்டை மரபை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் வரும் இந்த சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப பரம்பரை வாரிசுகள் இன்றும் உள்ளனர். குறிப்பாக சார்பட்டா பரம்பரையில் வரும் கதாபாத்திரங்களின் நிஜவாழ்க்கை மனிதர்கள் தற்போதும் உள்ளனர்.

nagesh talking sarpatta parambarai in old movie viral video

இந்நிலையில் தான், அந்த காலத்தில் வெளியான ஒரு பழைய கருப்பு வெள்ளை படத்தில் நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ் நடித்துள்ள ஒரு காட்சியில் சார்பட்டா பரம்பரை குறித்தும் இடியப்ப பரம்பரை குறித்து அவர் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் நாகேஷ் பேசும்போது, சார்பட்டா பரம்பரை பருவதத்திற்கும் இடியப்ப பரம்பரை தனலக்‌ஷ்மிக்கும் ரோசமான சண்டை என கூவி, நின்று பார்க்க 5 காசுகள், உட்கார்ந்து பார்க்க 10 காசுகள் என  டிக்கெட்டுகளை விற்பதாக பேசுகிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது, ‘குத்துச்சண்டை பரம்பரை’ தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் எந்த அளவிற்கு ரிசர்ச் செய்துள்ளார் என்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ALSO READ: "என் திரை வாழ்க்கையில் ரங்கன் கேரக்டர்..".. "சோஷியல் மீடியாவுல இருக்கனா?".. மனம் திறந்த நடிகர் பசுபதி!

தொடர்புடைய இணைப்புகள்

nagesh talking sarpatta parambarai in old movie viral video

People looking for online information on Arya, Nagesh, Pa Ranjith, Pasupathi, Sarpatta Parambarai, Sarpatta Parambarai Tamil will find this news story useful.