www.garudabazaar.com

செம்ம! 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ENEMY' பட டீசர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இருமுகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் 'எனிமி'  படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’, விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார்.

arya vishal enemy teaser crossed 11 million views

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். 

arya vishal enemy teaser crossed 11 million views

சென்னை மற்றும் துபாயில் நடந்த இந்த படத்தின்  படப்பிடிப்பு முடிந்த தருவாயில் 'எனிமி' படத்தின் டீசரை படக்குழு (24.07.2021) அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி  படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தின் டீசர்.

வெளியாகி சிலமணி நேரங்களிலேயே அனைத்து மொழிகளிலும் சேர்த்து 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

arya vishal enemy teaser crossed 11 million views

வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசர் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து 2 வது இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. 

arya vishal enemy teaser crossed 11 million views

செப்டெம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செம்ம! 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ENEMY' பட டீசர்!!! வீடியோ

arya vishal enemy teaser crossed 11 million views

People looking for online information on Arya, Enemy Tamil, Vishal will find this news story useful.