www.garudabazaar.com

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயின் இவரா? பட்டைய கெளப்பும் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் உருவாகி வருகிறது.

ayyappanum koshiyum remake heroine name announced

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார்.

இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். நாகவம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் வருகிற ஜனவரி மாதம் மஹா சங்கராந்தியை முன்னிட்டு ரிலிசாகும் என ஏற்கனவே படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவித்துள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யானுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். நித்யா மேனன் கடைசியாக தெலுங்கில் 2020ல் வந்த 'நின்னிலா நின்னிலா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

ayyappanum koshiyum remake heroine name announced

People looking for online information on Nithya Menon will find this news story useful.