நாடோடிகள் படத்தில் நடித்த கோபாலகிருஷ்ணன் காலமானார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடோடிகள் படித்தில் நடித்த கே.கே.பி.கோபால கிருஷ்ணன் காலமானார் என தற்போது தெரியவந்துள்ளது.

nadodigal actor kkp gopala krishnan passed away

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கே.கே.பி.கோபால கிருஷ்ணன். அனன்யாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த இவர், 'மாப்ள, இந்த கையில கவர்மென்ட் ஆர்டரு, இந்த கையில் பொண்ணு' என பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. இதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், நிமிர்ந்து நில், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் கே.கே.பி.கோபால கிருஷ்ணன் காலமானதாக தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்த இவர், உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கிராமத்து கதாபாத்திரங்களில் வட்டார மொழியில் பேசி தமிழ் ரசிகர்களை இவர் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor