நடிகர்களின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் நடிகர் சங்கத்தின் புதிய முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்களின் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Nadigar Sangam forms special committee to safegaurd and self-respect of artists

தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுய கௌரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

அதன் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், குழு அமைப்பாளர்கள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினற்கள் பூச்சிமுருகன்,லலிதாகுமாரி, நடிகை சுஹாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த சிறப்புக் குழு மூலம் நடிகர், நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.