'தலைவர் 168' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல இந்திய ஸ்போர்ட்ஸ் பெர்சனை சந்தித்த சூப்பர் ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 24, 2019 10:02 AM
'தர்பார்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 'தலைவர் 168' படப்பிடிப்பின் போது ஹைதராபாத்தில் சந்தித்தார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : PV Sindhu, Rajinikanth, Superstar, Thalaivar 168