www.garudabazaar.com

"தம் படம் முடிஞ்சதும் 'சில்லுனு ஒரு காதல்'னு ஒரு படம் பண்ண வேண்டியது".. சிம்பு பகிர்ந்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேச்சு வைரலாகி வருகிறது.

Silambarasan TR talks about his dropped Sillunu oru Kadhal

Image Credit - Studio Green

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர்  வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய சிம்பு, "என்னோட இயக்குனர் கிருஷ்ணா. தம் படத்துக்கு அப்பறம் ஜில்லுனு ஒரு காதல்னு ஒரு படம் பண்ண வேண்டியது. ஆனால் அது வேற ஒரு கதை. அப்பவே கிருஷ்ணா மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. கண்டிப்பா கிருஷ்ணா பெரிய இயக்குனராக வரனும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போ நடந்திருக்கு. அப்போ பண்ணிருந்தால் ஒரு தல தான் கிடைச்சுருக்கும். இப்போ பத்து தல கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு." என சிம்பு பேசினார்.

"தம் படம் முடிஞ்சதும் 'சில்லுனு ஒரு காதல்'னு ஒரு படம் பண்ண வேண்டியது".. சிம்பு பகிர்ந்த தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR talks about his dropped Sillunu oru Kadhal

People looking for online information on Pathu Thala, Silambarasan TR, Sillunu Oru Kadhal will find this news story useful.