நிஜ சுமோ Wrestler உடன் அகில உலக சூப்பர் ஸ்டார்! - வைரலாகும் புகைப்படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 18, 2019 07:48 PM
அகில உலாக் சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் பி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விளையாட்டு சம்மந்தமான திரைப்படம் ஒன்றில் சிவா பிசியாக நடித்து வருகிறார். ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
சிவா நடிக்கும் இப்படத்திற்கு ‘சுமோ’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் சிவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிவாவுக்கு ஜோடியாக ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பின் பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நிஜ சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவுடன் சிவா, பிரியா ஆனந்த் உள்ளனர். சுமோ மல்யுத்தம் பற்றிய இப்படத்தில் 18 நிஜ சுமோ மல்யுத்த வீரர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.