Breaking - அகில உலக சூப்பர் ஸ்டாரின் Sports Film-க்கு சிரிப்பு டைட்டில்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 02:26 AM
அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விளையாட்டு சம்மந்தமான திரைப்படம் ஒன்றில் சிவா பிசியாக நடித்து வருகிறார். ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
சிவா நடிக்கும் இப்படத்திற்கு ‘சுமோ’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் சிவா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சிவாவுக்கு ஜோடியாக ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பின் பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். மேலும், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இது தவிர, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மல்டி ஸ்டாரர் படமான ‘பார்ட்டி’ திரைப்படத்திலும் சிவா நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ், ஜெயராம், சத்யரஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.