ஆர்.ஜே. பாலாஜி தான் ரியல் ஹீரோ - பிரபல நடிகை புகழாரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருக்கும் படம் "எல்கேஜி". இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.  கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Priya Anand said in LKG Success meet, RJ Balaji is real hero

லியோன் ஜேம்ஸ் இசையமைத்த இந்த படத்தை கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் படத்தில் பங்கு பெற்ற திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய நடிகை பிரியா ஆனந்த், கடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. படப்பிடிப்பின் போது மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார்.