www.garudabazaar.com

Mia Khalifa: வேறலெவல் சமையல்.. Cook With Comali-க்கு கூட்டிட்டு வாங்கப்பா இவங்கள! வைரல் ஆகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Mia Khalifa: பிரபல நடிகை மியா காலிஃபா வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

சோஷியல் மீடியாவில் மியா காலிஃபா

சர்வதேச நடிகை மியா காலிஃபா தம் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் சமீபகாலமாக ஆக்டிவாக இருந்து வருகிறார். முன்னதாக சமூகக் கருத்துகள் தொடர்பாகவும் அவர் பல்வேறு பதிவுகளை பதிவிட்டிருந்தார். இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கூட அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

Also Read: "100 தடவை விழுந்தேன்!.. விட்டுட்டு போய்டலானு நெனைச்சேன்!".. "இது ஆரம்பம் தான்"..  பனிச்சறுக்கு குறித்து நடிகை சமந்தா! வீடியோ

பீப் சமைக்கும் மியா

இந்நிலையில், நடிகை மியா காலிஃபா வெளியிட்டிருக்கும் புதிய விடியோவில் அவர் பீப் சமைக்கிறார். ஆம், பீப் சுக்கா வைப்பதுடன், அதை முழுமையாக அவர் எவ்வாறு சமைக்கிறார் என்பது முதற்கொண்டு அந்த வீடியோவில் பதிவாகும் வரை மியா காலிஃபா பதிவு செய்து தம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

வேறலெவல் சமையல்

இந்த வீடியோவை பார்த்த மியா காலிஃபா சமைக்கும் அழகை கண் கொட்டாமல் பார்த்ததுடன், அட இவர் இப்படியெல்லாம் சமைப்பாரா? என்று கமெண்டுகளும் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் இன்னும் சிலர் மியா காலிஃபா எவ்வாறு சமைக்கிறார் என்று பார்த்து, அதன்படி தம் வீட்டிலும் சமைப்பதற்கான முயற்சியை செய்யப்போவதாக பத்விட்டுள்ளனர்.

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

பரவும் வீடியோ

நம் ஊரில் இதே பீப் சுக்காவை சமைக்கும்போது இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பீப் உடன் கலந்து வேக வைப்பார்கள். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி முழு கரம் மசாலா, ஜீரகம், பெருஜீரக சேர்த்து தாளித்துக் கொள்வார்கள்.

Also Read: 'பத்மஶ்ரீ' சவுக்கார் ஜானகி! மறக்க முடியாத எத்தனை 100 படங்கள்! நடிகர்கள் சார்பில் நாசர் வாழ்த்து!

அதன் பின்னர், சின்ன வெங்காயம் முதலிலும் பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, இறுதியில் மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி பீப்புடன் சேர்த்து இறக்குவார்கள். இதே புரொசிஜரை சற்றே வேற மாதிரி செய்யும் மியா, உருளைக் கிழங்கை வேகவைத்து பட்டரை டோஸ்ட் செய்து, வேக வைத்த பீப்புடன் சேர்த்து இறக்கி வேற லெவல் பண்ணுகிறார். இந்த வீடியோவை அவரே பதிவிட்டதை அடுத்து வைரலாகி வருகிறது.

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

குக் வித் கோமாளிக்கு கூட்டிட்டு வாங்கப்பா!

மியா கலிஃபாவின் இன்ஸ்டாகிராமில் வலம் வரும் இந்த வீடியோவை பார்த்த இன்னும் சில தமிழ் ரசிகர்கள், “இவரை பேசாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துடலாமே?” என்றெல்லாம் பேசி வருகின்றனர். ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி போய்க்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MIA KHALIFA: வேறலெவல் சமையல்.. COOK WITH COMALI-க்கு கூட்டிட்டு வாங்கப்பா இவங்கள! வைரல் ஆகும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mia Khalifa beef cooking Video breaks internet viral trending

People looking for online information on Cook with comali, Cook With Comali 2, Cook with comali 3, CookWithComali3, Mia Khalifa, Mia Khalifa Beef, Mia Khalifa Beef cooking Video, Mia Khalifa cooking Video, MiaKhalifa will find this news story useful.