இசையமைப்பாளர் அம்ரீஷ் மீதான 'இரிடியம்' குற்றச்சாட்டு ... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முகப்பு > சினிமா செய்திகள்மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரீஷ்.

கடைசியாக த்ரிஷா நடிப்பில் ஹாட் ஸ்டாரில் வெளியான பரமபதம் விளையாட்டு திரைப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்திருந்தார். பழம்பெரும் நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ‘கலைமாமணி’ டாக்டர் ஜெயசித்ராவின் மகனான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இளம் இசையமைப்பாளராக திரையுலகில் அறியப்படுபவர்.
இந்நிலையில், குழந்தை நட்சத்திரம், கதாநாயகன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட அம்ரிஷ் மீது 26 கோடி இரிடியம் (Iridium) வழக்கு F.I.R (முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலான தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பான வழக்கை நேற்றைய தினம் விசாரித்த பின்பு, அம்ரிஷ்க்கு இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டதுடன், இந்த வழக்கு விவகாரத்தில் இருந்து அவரை விலக்குவதாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ: "இந்தா வந்துருச்சுல்ல.. " CWC சீசன் 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show! கலக்கல் Promo!