விஜய் பிறந்தநாள் அன்று.. இப்படி ஒரு விஷயம் வரும்.!! - இயக்குநர் ரத்னகுமார் கொடுக்கும் க்ளூ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் பிறந்தநாள் குறித்து இயக்குநர் ரத்னகுமார் சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய் பிறந்தநாள் அன்று இது ரிலீஸ் - பிரபல இயக்குநர் க்ளூ | master writer rathna kumar hints on vijay birthday special poster

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சம்மருக்கு ரிலீஸ் ஆக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனிடையே பிரபல திரைப்பட போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் ஒவ்வொரு ரெட்ரோ க்ளாசிக் படங்களின் போஸ்டர்களை வடிவமைத்து ரிலீஸ் செய்து வருகிறார். மூன்றாம் பிறை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களுக்கு அவர் போஸ்டர் டிசைன் செய்து வெளியிட்டுள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள இயக்குநர் ரத்னகுமார், இன்னும் 8 நாளில் 8 போஸ்டர்கள் வர போகிறது, கடைசி போஸ்டர் வரும் நாள் ஜூன் 22'' என பதிவிட்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளை குறித்து ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவின் மூலம், ரசிகர்களை சந்தோஷப்படுத்தக் கூடிய ஒரு போஸ்டர் அன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கிறார்கள் நெட்டிசன்ஸ். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பிறந்தநாள் அன்று இது ரிலீஸ் - பிரபல இயக்குநர் க்ளூ | master writer rathna kumar hints on vijay birthday special poster

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Rathna Kumar, Vijay, Vijay birthday will find this news story useful.