ப்பா என்ன Transformation ! Beast Mode-ல் அருண் விஜய் - மாஸ்டர் பிரபலம் மிரண்டு போய் செய்த கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனையடுத்து படப்படிப்புகள் உள்ளிட்ட பணிகள் இல்லாததால் பிரபலங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்களது பதிவுகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடற்கட்டுக்களுடன் இருக்கும் டிரான்ஸ்ஃபர்மேசன் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் முடியாதது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் நடிகர் உண்மை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அருண் விஜய் 'தடம்', 'மாஃபியா' என அடுத்தடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.  இதனையடுத்து 'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'அக்னி சிறகுகள்' படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பாக்ஸர், ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் 'சினம்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து 'குற்றம் 23'க்கு பிறகு இயக்குநர் அறிவழகனுடன் இணைந்து 'ஜிந்தாபாத்' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Entertainment sub editor