''கொரோனா எப்படி பரவுது? - துல்லியமான வீடியோ'' - எச்சரித்த 'மாஸ்டர்' நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் மக்கள் அனைவரும் அவசியமில்லாமல் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா போல சமூக பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது..

Master actor sriman Shares japanese Coronavirus awarness video | மாஸ்டர் ஸ்ரீமன் ட்விட்டரில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்தா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலரும் சமூக வலதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''வைரஸ் எப்படி பரவுதுனு பாருங்க.  ஜப்பானியர்கள் சக்திவாய்ந்த கேமரா கொண்டு படம் பிடித்துள்ளனர். நிலமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அனைவரும் வீட்டில் இருங்கள். நாம் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்

Entertainment sub editor