விக்ரமின் ’சோழ மன்னன்’ வேடத்தில் வெளியான புகைப்படம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 03, 2020 01:44 PM
’கடாரம் கொண்டான்’ படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’, அஜய் ஞானமுத்து இயக்கும் ’கோப்ரா’ ஆகிய இரு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கல்கி எழுதிய வரலாற்று புதினத்தை மையப்படுத்தி உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் அவருடன் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்கன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இரண்டு திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் சோழர் காலத்து கதை என்பதால் நடிகர் விக்ரமின் பழைய புகைப்படம் ஒன்றை சோழ மன்னரின் தோற்றமாக பாவித்து ஒரு தேனீர் தூள் விளம்பரம் பயன்படுத்தியுள்ளது பரவலான கவனம் பெற்றுள்ளது.