ஆடைக்கு பிறகு அமலா பால் நடித்துள்ள படத்தின் சென்சார் விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஆடை’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Amala Paul's Atho Andha Paravai Pola censored and certified as U

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்வெஞ்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை அமலா பாலுடன் முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தின் பாடல்கள், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.