மாஸ்டர் ட்ரெய்லர பாத்தா நீங்களும் இப்படித்தான் ஆவீங்க! மனம் திறக்கிறார் மாளவிகா மோகனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது அடுத்த பெரிய படமான ‘மாஸ்டர்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.

Malavika Mohanan breaks about Master Trailer for the first time

மாஸ்டர் டிரெய்லரைப் பார்த்த அனுபவம் பற்றி மாளவிகா மோகனன் மனம் திறக்கிறார்

அவர் Behindwoods-க்கு அளித்த பேட்டியில், ரஜினி மற்றும் விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பற்றி மாலவிகா மனம் திறந்து பேசினார். 

ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி கூறுகையில், “பேட்ட” படத்தின் போது நான் ரஜினி சாருடன் நிறைய நேரம் பேசுவேன். அந்த உரையாடல்கள் அருமையானவை. விஜய் சாருடன் கூட ஷூட்டிங் செட்களில் சில அருமையான உரையாடல்களைக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு பெரிய படங்களில் பணியாறியது ஒரு அற்புதமான அனுபவம். "

‘மாஸ்டர்’ டிரெய்லர் பற்றி பேசிய அவர், “சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதுதான் நான் முதன்முதலில் மாஸ்டர் டிரெய்லரைப் பார்த்தேன். பிறகு திரும்பிச் செல்லும்போது மீண்டும் டிரெய்லரைப் பார்த்தேன். இது நிச்சயம் ஒரு பித்துநிலைதான்... உங்களுக்கும் மெய்சிலிர்க்கும்படியாகத்தான் இருக்கும்! ”

மாளவிகா ‘மாஸ்டர்’ படத்தின் கிளாசிக் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ பாடலைப் பாடினார். மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு முழு வீடியோவையும் பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

Malavika Mohanan breaks about Master Trailer for the first time

People looking for online information on Malavika Mohanan, Master, Master trailer will find this news story useful.