ரசிகரின் வீட்டிற்கு சென்று பார்த்த ஹீரோ.. மருத்துவத்திற்கு உடனடி உதவி. - நெகிழ்ச்சி சம்பவம்.
முகப்பு > சினிமா செய்திகள்உடல்நிலை சரியில்லாத ரசிகரை, அவரின் வீட்டிற்கே சென்று பார்த்துள்ளார் பிரபல தமிழ் சினிமா நடிகர்.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்கள் கவர்ந்துள்ளவர் கலையரசன். பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மூலம் இவர் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் கபாலி, தானா சேர்ந்த கூட்டம், ஐரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கலையரசன் செய்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலையரசனின் பாண்டிச்சேரி ரசிகர் மன்ற நிர்வாகியான தினேஷ் என்பவர், நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். இதையடுத்து இவ்விவரம் அறிந்த கலையரசன், அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதுடன், மேற்கொண்டு சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார். சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றாலும் பராவாயில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரசிகரின் வீட்டிற்கு சென்று பார்த்த ஹீரோ.. மருத்துவத்திற்கு உடனடி உதவி. - நெகிழ்ச்சி சம்பவம். வீடியோ