Bigg Boss 3: ''கிரிக்கெட் பார்க்கும் போது...'' - வனிதாவை மரணமாய் கலாய்க்கும் கமல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 07, 2019 07:24 PM
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் வனிதா, ஷெரினை பார்த்து, ''நீ ஒழுங்கா கேம் ஆடல என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதனால் வெகுண்டெழுந்த ஷெரின், ''இது பிக்பாஸா இல்ல ஜெயிலா இவங்க சொல்றத நான் கேட்பதற்கு'' என்று காண்டானார். இந்நிலையில் தற்போது செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
அதில், கமல் முன்பு பேசும் வனிதா, நான் 10 இடத்துல 10 பேசியிருக்கேன் சார். அது பாதி பாதியா வெட்டி போடும்போது அது வனிதா இந்த இடத்துல இது பேசுறா அங்க போய் அத பேசுறா என்பது போல தெரிந்தது. கிரிக்கெட்ல ஹைலெட்ஸ் போடுவாங்க, ரிசல்டு மாறாது. ஸ்கோர் அதே தான் என்கிறார்.
BIGG BOSS 3: ''கிரிக்கெட் பார்க்கும் போது...'' - வனிதாவை மரணமாய் கலாய்க்கும் கமல் வீடியோ
Tags : Kavin, Sherin, Losliya, Bigg Boss 3