Udanprape others
www.garudabazaar.com

தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறியதா சிம்புவின் மாநாடு? புதிய ரிலீஸ் தேதி என்ன? முழு தகவல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

maanadu out from diwali race? here is the truth from producer

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

maanadu out from diwali race? here is the truth from producer

இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டைம் லூப் பாணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் தீபாவளி நாளில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதே நாளில் விஷால் ஆர்யா நடித்த எனிமி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

maanadu out from diwali race? here is the truth from producer

இந்நிலையில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்...நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் "மாநாடு". முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல... ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

maanadu out from diwali race? here is the truth from producer

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

maanadu out from diwali race? here is the truth from producer

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. சில காரணங்களுக்காக ஏன்  என் படமும் அதன் வெற்றியும்  பலியாக வேண்டும்?? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள். - சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர், என குறிப்பிட்டுள்ளார்.

maanadu out from diwali race? here is the truth from producer

எனவே மாநாடு படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுகிறது. மேலும் நவம்பர் 25 அன்று மாநாடு படம் வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

maanadu out from diwali race? here is the truth from producer

People looking for online information on Maanadu, Silambarasan TR, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.