Udanprape others
www.garudabazaar.com

தீபாவளி ரிலீசுக்கு முன் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

Famous actor started his dubbing Maanadu Movie Update

இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Famous actor started his dubbing Maanadu Movie Update

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Famous actor started his dubbing Maanadu Movie Update

இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'மாநாடு' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணியை படக்குழு துவங்கி உள்ளதாகவும், நடிகர் S J சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Famous actor started his dubbing Maanadu Movie Update

தொடர்புடைய இணைப்புகள்

Famous actor started his dubbing Maanadu Movie Update

People looking for online information on S J Suriyah, Silambarasan, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.