Udanprape others
www.garudabazaar.com

நானி,மடோனா,கீர்த்தி ஷெட்டி நடிக்கும் SSR படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்! எந்த படத்தோட Clash?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் படம் #SSR 'ஷியாம் ஷிங்கா ராய்'.

Release update of the new movie starring Nani SSR

இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது.

Release update of the new movie starring Nani SSR

கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 26ல் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

Release update of the new movie starring Nani SSR

சில தினங்களுக்கு முன் படக்குழு  நானியின் புதிய லுக்கை படக்குழு ஒரு வீடியோ மூலம் வெளியிட்டது. அதில் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 24 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Release update of the new movie starring Nani SSR

இதே கிறிஸ்துமஸ்க்கு சூர்யா எதற்கும் துணிந்தவன், ரன்வீர் சிங், ஜீவா நடித்த 83  ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளன.  

 

Tags : Nani

Release update of the new movie starring Nani SSR

People looking for online information on Nani will find this news story useful.