www.garudabazaar.com

பாலிவுட் பற்றி ஏ.ஆர்.ரகுமானுக்கு தெரிய வந்த சதி..! - கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பளார் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக வைரமுத்துவின் வீடியோ | Lyricist Vairamuthu shares his Video Supporting AR Rahman on Bollywood Nepotism Issue

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது இசையால் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைத்த பாடல்கள் காலங்கள் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இவர் தற்போது மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த தில் பேச்சரா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக வைரமுத்துவின் வீடியோ | Lyricist Vairamuthu shares his Video Supporting AR Rahman on Bollywood Nepotism Issue

இதனிடையே அண்மையில் ஒரு பேட்டியில் பாலிவுட் சினிமா பற்றி பேசிய ஏ.ஆர்.ரகுமான், தான் ஏன் அதிகம் பாலிவுட் படங்களில் இசையமைக்கவில்லை என்பதன் காரணம், ஒரு  குழு எப்போதுமே என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகின்றனர். மேலும் தனக்கு எதிராக நடக்கும் இந்த சதியால், வெறும் டார்க் ஜானர் திரைப்படங்களே அதிகம் வருகின்றன. ஆனால் எனக்கு கவலை இல்லை'' என தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். 

ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் சினிமா மீது முன் வைத்த இந்த விமர்சனம், சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளன. இதனிடையே கவிஞர் வைரமுத்து தற்போது ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதராவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை'' என தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக வைரமுத்துவின் வீடியோ | Lyricist Vairamuthu shares his Video Supporting AR Rahman on Bollywood Nepotism Issue

People looking for online information on AR Rahman, Bollywood, Vairamuthu will find this news story useful.