www.garudabazaar.com

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி சஹானாவின் ஜாலி பேட்டி.! - குட்டி ஸ்டோரி, விஸ்வாசம்னு கலக்குறாங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி சஹானா தனது இசைப்பயணம் குறித்து ஜாலியாக நம்முடன் உரையாடினார். 

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சஹானாவின் ஜாலி பேட்டி | ar rahman appreciated singer sahana interview with vijay ajith song performance

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இருந்து தும்பி துள்ளல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இதனிடையே இப்பாடலை பார்வையற்ற சிறுமியான சஹானா கீபோர்டில் வாசித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த ஏ.ஆர்.ரகுமான், ''ஸ்வீட்'' என பாராட்டி பதிவிட்டிருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் சஹானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்நிலையில் சஹானா நம்மிடம் வீடியோ கால் மூலம் செம ஜாலியாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, ''எனக்கு ரகுமான் சாரையும், இளையராஜா சாரையும் ரொம்ப புடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் சார் என் வீடியோவை பார்த்து பாராட்டுன விஷயத்தை, அம்மாதான் முதலில் சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு'' என குஷியாக சொல்லிய அவர், விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலையும், விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலையும் வாசித்து அசத்தினார். 

மேலும் தனது நண்பர்கள் தன்னை போல ஆக வேண்டும் என சொல்வதாகவும், எதிர்காலத்தில் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என் கனவு எனவும் தெரிவித்தார் சிறுமி சஹானா. அவர் பேசிய முழு வீடியோ இதோ. 

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி சஹானாவின் ஜாலி பேட்டி.! - குட்டி ஸ்டோரி, விஸ்வாசம்னு கலக்குறாங்க.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சஹானாவின் ஜாலி பேட்டி | ar rahman appreciated singer sahana interview with vijay ajith song performance

People looking for online information on AR Rahman, Singer Sahana will find this news story useful.