FRIENDSHIP - செம ஸ்டைலிஷ் லாஸ்லியா... சீரியஸ் ஹர்பஜன்... வெளியானது 'மிரட்டலான' பர்ஸ்ட் லுக்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது செயல்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடிக்கிறார்.

பிரெண்ட்ஷிப் படத்தின் 'மிரட்டலான' பர்ஸ்ட் லுக் Losliya and Harbhajan singh film Friendship first look motion poster

இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். மேலும் Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. முன்பே அறிவித்தது போல படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் அவர்களின் தமிழ் கோச் சரவணன் பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அதிரடியாக வெளியாகி உள்ளது. அதில் 'கெமிஸ்ட்ரி' கோட்பாடுகள் நிறைந்த திரையில், செம ஸ்டைலிஷான லாஸ்லியா, சீரியஸான ஹர்பஜன் சிங், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தோன்றுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு DOP சி.சாந்தகுமார் மற்றும் எடிட்டிங் வேலைகளை தீபக் S துவாரக்நாத் பொறுப்பேற்கின்றனர். இந்த படத்தின் VFX வேலைகளை கணேஷ் மற்றும் பாசில் மிரட்ட, படத்தின் வசனங்களை பி.எஸ்.ராஜ் கையாள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FRIENDSHIP - செம ஸ்டைலிஷ் லாஸ்லியா... சீரியஸ் ஹர்பஜன்... வெளியானது 'மிரட்டலான' பர்ஸ்ட் லுக்...! வீடியோ

பிரெண்ட்ஷிப் படத்தின் 'மிரட்டலான' பர்ஸ்ட் லுக் Losliya and Harbhajan singh film Friendship first look motion poster

People looking for online information on Arjun, Friendship, Harbhajan Singh, Losliya will find this news story useful.