www.garudabazaar.com

BREAKING: லோகேஷ் கனகராஜூடன் கேரளாவுக்கு சென்ற தளபதி 67 படக்குழு? சம்பவம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் பிரத்யேக அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

Lokesh Kanagaraj Thalapathy 67 Team went to Munnar & Karnataka

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Lokesh Kanagaraj Thalapathy 67 Team went to Munnar & Karnataka

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம்  வெளியானது. மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

Lokesh Kanagaraj Thalapathy 67 Team went to Munnar & Karnataka

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது குழுவினருடன் தளபதி 67 படத்திற்கு படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்ய மூணார் & கர்நாடக மாநிலம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லோகேஷ் குழுவினர் உடன் தயாரிப்பாளர் லலித் உடன் சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Thalapathy 67 Team went to Munnar & Karnataka

People looking for online information on Thalapathy67, Vijay will find this news story useful.