www.garudabazaar.com
iTechUS

படு பிஸியாக LEO பட வேலைகள்.. காஷ்மீரில் இருந்து சுடச்சுட வந்த அடுத்த ஃபோட்டோ..‌

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj Latest photo from Leo Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார்.

Lokesh Kanagaraj Latest photo from Leo Shooting Spot

இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

இந்நிலையில் காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெகல்ஹாம் பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பின் நடுவே லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட BTs  புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பனிமலை சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் பிண்ணனியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Latest photo from Leo Shooting Spot

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.