www.garudabazaar.com

லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் நடிகர் பிரபுதேவா... வேற லெவல் சர்ப்ரைஸ் நியூஸ் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு 'விக்ரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனுக்கு 232 வது படம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

lokesh kanagaraj join hands with Prabhu deva லோகேஷ் கனகராஜ் உடன் பிரபுதேவா

இந்நிலையில் இந்த ஏற்கனவே 1986-ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் வேட்டி சட்டையுடன் இருக்கும் சிலருடன் கமல்ஹாசன் அமர்ந்து அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது போல சமீபத்தில் டீசர் வெளியானது. இதைப் பார்த்த  பொழுது கைதி படத்தில் இடம்பெற்ற பிரியாணி சீன் தான் ஞாபகத்துக்கு வந்தது. இந்நிலையில் வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த அதிரடி காம்போவில் நடிகர் பிரபுதேவா இணைந்துள்ளாராம். எனவே தரமான சம்பவத்தை எதிர்பார்க்கலாம் போல.

தொடர்புடைய இணைப்புகள்

lokesh kanagaraj join hands with Prabhu deva லோகேஷ் கனகராஜ் உடன் பிரபுதேவா

People looking for online information on Lokesh Kanagaraj, Prabhudeva will find this news story useful.