www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டர்.. தியேட்டரில்தான் ரிலீஸ்.. அது எப்போ தெரியுமா.?! வெளியாகும் தேதி இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பிரத்யேக தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

மாஸ்டர் பட ரிலீஸ் தகவல் | vijay lokesh kanagaraj's master release date details

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். 

மாஸ்டர் பட ரிலீஸ் தகவல் | vijay lokesh kanagaraj's master release date details

மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி தியேட்டரில்தான் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. 

மாஸ்டர் பட ரிலீஸ் தகவல் | vijay lokesh kanagaraj's master release date details

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் படம் இந்த தேதியில் வெளியாகும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் பட ரிலீஸ் தகவல் | vijay lokesh kanagaraj's master release date details

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.