www.garudabazaar.com
iTechUS

தமிழ்நாடா?.. தமிழகமா?.. என்ற கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த வைரல் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Answered about Tamilnadu Tamilakam Question

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

Lokesh Answered about Tamilnadu Tamilakam Question

இந்நிலையில் வருமான வரித்துறை சார்பில் கோவையில் நடந்த இளம் தொழில் அதிபர்களுக்கான விருது விழாவில் கலந்து கொண்ட பிறகு லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், "தமிழ்நாடு என்று கூறுவீர்களா? தமிழகம் என்று கூறுவீர்களா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "நிகழ்ச்சி தொடர்பாக மட்டும் பேசலாம். எனக்கு தமிழ்நாடு என்று கூறுவதே விருப்பம்" என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Answered about Tamilnadu Tamilakam Question

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy67 will find this news story useful.