www.garudabazaar.com

விஜய் யேசுதாஸ் வீட்டிலும் 60 சவரன் நகை திருட்டு! பணியாட்கள் மீது சந்தேகம்.. பரபரப்பு புகார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் பிரேமம் திரைப்படத்தில் இடம் பெற்ற மலரே, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் இடம்பெற்ற தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உள்ளிடம் பல சினிமா பாடல்களை பாடி இருக்கிறார். தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்திருந்த இவர் பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் ஆவார்.

like Aishwarya Rajinikanth Jewel theft in Vijay Yesudas home

சென்னை ஆழ்வார்பேட்டை அபிராமபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வரும் இவரது வீட்டில்தான் தற்போது 60 சவரன் நகை திருட்டு போயிருக்கிறது. ஆம், கடந்த மார்ச் 30 ஆம் தேதி இவருடைய மனைவி தர்ஷா பாலா கோபால், அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அழுத்திருந்தார். இந்த புகாரின்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி வீட்டில் இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்களுடைய 60 சவரன் தங்க மற்றும் வைர நகைகளை பார்த்ததாகவும் பின்னர் மார்ச் மாதம் 18ஆம் தேதி அந்த நகைகளை எடுக்கச் சென்றபோது அவற்றை காணவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த நகைகளை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று புகார் அளித்திருக்கும் தர்ஷா பாலா கோபால், தன்னுடைய வீட்டில் பணிபுரியும் மேனகா, பெருமாள், சையத் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜய் யேசுதாஸ் வீட்டுக்கு சென்று பரிசோதனைகள் நடத்தியதுடன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்புதான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கள் வீட்டில் இருந்து தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் திருட்டு போனதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் கைது செய்யப்பட்ட அவரது வீட்டு பணியாளர் ஈஸ்வரி  பல நாட்களாக தொடர்ந்து திட்டமிட்டு திருடியது உறுதியானது. அதை அடுத்து ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். பின்னர் ஈஸ்வரி திருடிய நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய இணைப்புகள்

like Aishwarya Rajinikanth Jewel theft in Vijay Yesudas home

People looking for online information on Aishwarya Rajinikanth, K. J. Yesudas, Vijay Yesudas will find this news story useful.