www.garudabazaar.com

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் லால்சிங் சத்தா.. புதுத் தமிழ் போஸ்டருடன் வெளியான கேரக்டர் UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆமிர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் ஷத்தா படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலிசாகிறது.

Kareena Kapoor Khan As Rupa from Laal Singh Chaddha Tamil Poster

Also Read | மாலத்தீவில் கணவர் விக்கியுடன் கத்ரினா கைப்.. கூட இந்த பிரபல நடிகை வேற இருக்காங்க பாருங்க!

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் ஆமீர் கான்  நடிக்கிறார்.  ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

Kareena Kapoor Khan As Rupa from Laal Singh Chaddha Tamil Poster

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Kareena Kapoor Khan As Rupa from Laal Singh Chaddha Tamil Poster

இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்தது, இதற்கான அறிவிப்பை POSTER வழியாக வெளியிட்டது.

Kareena Kapoor Khan As Rupa from Laal Singh Chaddha Tamil Poster

அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2, பீஸ்ட் படங்களுடன் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | உடல் எடை குறைத்து Fit-ஆக மாறிய நடிகை மீரா ஜாஸ்மீன்.. இணையத்தை கலக்கும் செல்ஃபி போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Kareena Kapoor Khan As Rupa from Laal Singh Chaddha Tamil Poster

People looking for online information on Aamir Khan, Kareena Kapoor, Laal Singh Chaddha, Laal Singh Chaddha Tamil Poster will find this news story useful.