www.garudabazaar.com

லட்சுமி மேனன் நடிப்பில் இப்படி ஒரு படம்! மிரட்டும் டிரெய்லருடன் வெளிவந்த ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் புதிய த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லருடன் ரிலீஸ் தேதியும் வெளிவந்துள்ளது.

Lakshmi Menon AGP movie Release Date announced

மலையாள சினிமாவில் கேரக்டர் ரோலில் நடித்து வந்தவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். 2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் என அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.

பின் றெக்க படத்தின் தோல்வியால் பட வாய்ப்பை இழந்தார். பிறகு சில வருடங்களுக்கு பிறகு இவர் பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் விரைவில் வெளிவர உள்ளது. கடைசியாக கொம்பன், குட்டிப்புலி, மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது.

 

காதலரோடு ஸ்ருதிஹாசன் விளையாடும் இந்த கேம் நல்லா இருக்கே..! க்யூட் ஆன வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஆளவந்தான், நடுநிசி நாய்கள், மூன்று, ஜீனியஸ் உள்ளிட்ட Schizophrenia எனும் மன நோயை பற்றிய படங்கள் ஏற்கனவே கொலிவுட்டில் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த படங்கள் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகும்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் யாரும் Schizophrenia படங்களில்  இதுவரை வெளிவந்ததில்லை. இந்நிலையில் இப்போது முதல் முறையாக முதலாவது Female Schizophrenia தமிழ் படமான "ஏஜிபி - Schizophrenia" படத்தில் Schizophrenia எனும் மன நோய் பாதித்தவராக லட்சுமி மேனன் நடிக்கிறார்.  இந்நிலையில் லட்சுமி மேனன் அடுத்து நடிக்கும் AGP படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. ஜனவரி 14 ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது. இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும். இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

லட்சுமிமேனன் உடன் பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள்.

 

'லீக்' ஆன படுக்கையறை புகைப்படம்! நீதி வெல்லும் என அறிக்கை விட்ட நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்!

ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் ரமேஷ் சுப்ரமணியன். இவர் 'நாய்கள் ஜாக்கிரதை ' போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் சினிமா கற்றவர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு  சந்தோஷ் பாண்டி. இவர் 'நிஷா ' என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர். இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு  இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி. கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

லட்சுமி மேனன் நடிப்பில் இப்படி ஒரு படம்! மிரட்டும் டிரெய்லருடன் வெளிவந்த ரிலீஸ் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmi Menon AGP movie Release Date announced

People looking for online information on AGP movie, AGP Trailer, குட்டிப்புலி, ஜிகிர்தண்டா, லட்சுமி மேனன், Lakshmi menon, Release Date Announced will find this news story useful.