பாகுபலி ராஜமௌலி இயக்கும் புதிய படத்தின் புதிய ரிலீஸ் தேதி! தல அஜித்தின் வலிமையுடன் மோதுதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".

Jr NTR Ram charan RRR movie new release date announced

இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. 

Jr NTR Ram charan RRR movie new release date announced

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

Jr NTR Ram charan RRR movie new release date announced

அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது. மேலும் புதிய வெளியீட்டு தெதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

Jr NTR Ram charan RRR movie new release date announced

அதன் படி இந்த RRR படம் அடுத்த வருடம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது.  இதே வேளையில் தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Jr NTR Ram charan RRR movie new release date announced

People looking for online information on Alia Bhatt, Jr ntr, Raja Mouli, Ramcharan will find this news story useful.