www.garudabazaar.com

P. வாசு இயக்கும் த்ரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக்! வெளியான OFFICIAL ரிலீஸ் தேதி! OTT யா? தியேட்டரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohan Lal) மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் கூட்டணியில் 2013-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான த்ரிஷ்யம், பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மிகவும் கவர்ந்தது.

Navya nair Drushya 2 Kannada release date announced

மலையாளத்தில் த்ரில்லர் படங்களை இயக்குவதின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் மலையாள சினிமாவில் மைல்கல் திரைப்படமானது. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் பாகம் போலவே இந்திய சினிமாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. குறிப்பாக தெலுங்கில் வெங்கடேஷ், கன்னடத்தில் ரவிசந்திரன், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆகிறது.

Navya nair Drushya 2 Kannada release date announced

த்ரிஷ்யம் 2 கன்னட ரீமேக்கில் ரவிசந்திரன், நவ்யா நாயர், பிரபு,ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளார். மோகன்லாலின் ஜார்ஜ்குட்டியாக கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயர் 'ராஜேந்திர பொன்னப்பா'. இந்நிலையில் திரிஷ்யா 2 திரைப்படத்தை பி.வாசு இயக்க, E4 எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளன.

Navya nair Drushya 2 Kannada release date announced

இந்த படம் நேரடியாக வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி இந்த படம் தியேட்டரில் ரிலீசாகிறது. இந்நிலையில் நவ்யா நாயர் 'த்ரிஷ்யா 2'  படத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கன்னட டயலாக் கற்றுக்கொள்வதை வீடியோ காட்டுகிறது.  

மேலும் செய்திகள்

Navya nair Drushya 2 Kannada release date announced

People looking for online information on Drushya 2, Navya Nair, P Vasu, Ravichandran will find this news story useful.