களைக்கட்டும் லீலா பேலஸ்! 'மரண மாஸ்' ஏற்பாடுகள்! பூப்பாதையா? சிங்கப்பாதையா? லேட்டஸ்ட் அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த வாரம் ரஜினிகாந்த் தமது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு பேசிய ரஜினி "கட்சி வேறு; ஆட்சி வேறு. 48 வயதுக்கு உட்பட்டவருக்கே கட்சியில் முக்கிய பொறுப்பு. தனக்கு முதல்வர் நாற்காலியில் அமர ஆசை இல்லை!’’ என்று பேசினார். அது தொண்டர்களுக்கு சிறிய ஏமாற்றம் அளித்தது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி "சில விஷயங்கள் எனக்கு ஏமாற்றமாக உள்ளது" என்று கூறினார். எனவே அன்றாவது ஒரு நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார் ரஜினி.
மேலும் ரஜினிக்கு அரசியல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் தமிழருவி மணியன் கூறும்போது "ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்ப்பார்ப்புகளுக்கும், கேள்விகளுக்கும் இன்று ரஜினிகாந்த் நிச்சயம் பதில் கூறுவார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி எம். ஆர். சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடக்கிறது. இதற்க்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஏனென்றால் இன்று இல்லை நாற்பது ஆண்டு காலமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது லட்சக் கணக்கான மக்களின் ஆசையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் பூப்பாதையா சிங்கப்பாதையா என்று!!!