RRR Others USA
www.garudabazaar.com

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்..! இதுக்கு மேல வேற என்ன வேணும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள ஹ்ரிதயம் திரைப்படம் விரைவில் ரீமேக் ஆக உள்ளது

hridayam movie tamil telugu hindi remake rights

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹிரிதயம். கடந்த ஜனவரி 21,2022 அன்று வெளியாகி இன்றும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வினித் சீனிவாசன் இயக்கிய இந்த படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் பிப்ரவரி மாதம் முதல் வெளியாகி உள்ளது.

hridayam movie tamil telugu hindi remake rights

மெர்ரிலன்ட் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக விகாஷ் சுப்ரமணியம்  மற்றும் நோபல் பாபு தாமஸ் தனது பிக் பேங் என்டர்டைன்மெண்ட்ஸ் மூலம் இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் ஆசியாநெட் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

பிரணவ் மோகன்லால் ஜோடியாக கல்யாணி பிரயதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ரஞ்சன் ஆப்ரஹாம் எடிட்டிராகவும், ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானே இந்த படத்தின் ஒன்னக்க முந்திரி, பொட்டு தொட்ட பௌர்ணமி, நகுமோ போன்ற பாடல்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனம் பாக்ஃஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைத்து ஹ்ரிதயம் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளனர்.

hridayam movie tamil telugu hindi remake rights

மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் "ரீமேக் உரிமையை வழங்கிய தயாரிப்பாளர் விகாஷ் சுப்ரமணியத்திற்கு நன்றி, ஹ்ரிதயம் படத்தை ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க உள்ளோம். மற்ற நடிகர் நடிகைகள் டெக்னிசியன்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும்" என அறிவித்துள்ளனர். 

hridayam movie tamil telugu hindi remake rights

தர்மா புரொடக்ஷன்ஸ் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரைகோண்டாவை வைத்து லைகர், அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர் - ஆலியாபட் நடிக்கும் ப்ரம்மாஸ்த்ரா, ரன்வீர் சிங் நடிப்பில் ராக்கி ஆவூர் ராணி கி பிரேம் கஹானி  ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

Tags : Hridayam

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

hridayam movie tamil telugu hindi remake rights

People looking for online information on Hridayam will find this news story useful.