www.garudabazaar.com

போடு.! கம்பேக் கெடுக்கும் நடிகை ஜெனிலியா.. Viral ஃபர்ஸ்ட் லுக்.. வாழ்த்திய நடிகர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜெனிலியா நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் 'Ved' (வேத்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

kichcha sudeep congrats on actress Genelia comeback

Also Read | SARDAR: முதல் வாரத்தை விட 2வது வாரத்தில் அதிக தியேட்டர்கள்.. செம மாஸ் காட்டும் 'சர்தார்'!

மகாராஷ்டிராவில் பிறந்த ஜெனிலியா டிசோஸா தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து விஜய், தனுஷ், ஜெயம் ரவி மற்றும் பரத் உள்ளிட்ட நடிகர்களோடு அவர் நடித்திருக்கிறார். 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஜெனிலியாவின் கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவந்த ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கரம் பிடித்தார்.

kichcha sudeep congrats on actress Genelia comeback

இந்நிலையில், முதன்முறையாக மராத்தி படத்தில் ஜெனிலியா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜெனிலியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். Ved (வேத்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்.

kichcha sudeep congrats on actress Genelia comeback

ஜெனிலியா தனது பட போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"நான் மகாராஷ்டிராவில் பிறந்தேன். நடிக்க ஆரம்பித்த பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிப் படங்களில் நடித்தேன். அங்குள்ள பார்வையாளர்களிடமிருந்து எனக்கு அபரிமிதமான அன்பு கிடைத்தது. ரித்தேஷ் இயக்கும் முதல் படத்தின் மூலம் மராத்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறேன். மராத்தியில் பணிபுரிவதால், நான் முழுமையடைந்துவிட்டதாக உணர்கிறேன். மராத்தியிலும் நீங்கள் என்னை நேசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் அவர்.  இந்தப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kichcha sudeep congrats on actress Genelia comeback

இந்நிலையில், பிரபல நடிகர் கிச்சா சுதீப் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியாவிற்கு வாழ்த்துக்கள். இருவரையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். சியர்ஸ்" எனக் குறிப்பிட்டு இருவரையும் டேக் செய்திருக்கிறார்.

 

Also Read | Doll Task : அசீம் - விக்ரமன் விஷயத்தில் Bigg Boss எடுத்த முடிவு?.. அடுத்தது என்ன??

தொடர்புடைய இணைப்புகள்

kichcha sudeep congrats on actress Genelia comeback

People looking for online information on Genelia, Genelia D Souza, Kichcha Sudeep will find this news story useful.