கிச்சா சுதீப் பயில்வானாக Ring-ற்குள் இறங்கும் நாள் எது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘பயில்வான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kichcha Sudeep as Pailwaan is all set to hit the screen on September 12, 2019

தமிழில், ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். கன்னடத்தில் சூப்பர் ஸ்டாரான இவர், தற்போது ‘பயில்வான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். குஸ்தி வீரராக சுதீப் நடிக்கும் இப்படத்தில் அகன்க்ஷா சிங், சுனில் ஷெட்டி, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘பயில்வான்’ திரைப்படம் வரும் செப்.12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருஷ்ணா இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இது தவிர, பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் ‘தபாங் 3’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சுதீப் நடித்து வருகிறார்.