www.garudabazaar.com

மான்ஸ்டர் வர்ற நாளை குறிச்சு வெச்சுக்கோங்க.. வெளியானது #KGF2 அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018-ஆம் ஆண்டு ‘கேஜிஎஃப்’ முதல் பாகம் வெளியாகி ஒரு சகாப்தத்தை உருவாக்கியது. 

KGF2 release date is out Yash யஷ் கேஜிஎஃப்-2 ரிலீஸ் தேதி

இந்நிலையில் தான் கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தினை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி முடித்துள்ளார்.  நடிகர் யஷ் , ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தின் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக வருகிற ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதை அடுத்து பட வெளியீடு தள்ளிப்போனது.

பின்னர் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் விலக்கப்பட்டு வருவதால், ‘கேஜிஎஃப் 2’ படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகுமா என பேசப்பட்டது. ஆனால்

இயக்குநர் பிரஷாந்த் நீல், “கேங்ஸ்டர்கள் திரை அரங்கம் முழுவதும் இருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். ” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனிடையே கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ மொழிவாரியான தொலைக்காட்சி உரிமங்களை ஜீ தமிழ், ஜீ கேரளம், ஜீ கன்னடம், ஜீ தெலுங்கு சேனல்கள் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் தான் கேஜிஎஃப் -2 படம் 2022 ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் நடிகர் யஷ், போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Also Read: காவலராக நடிக்கும் Ex கால்பந்து வீரர்... விமரிசையாக நடந்த Audio Launch! என்ன படம்? யார் ஹீரோனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

KGF2 release date is out Yash யஷ் கேஜிஎஃப்-2 ரிலீஸ் தேதி

People looking for online information on Prashanth Neel, Yash, ZeeTamil, ZeeTBV will find this news story useful.