www.garudabazaar.com

காவலராக நடிக்கும் Ex கால்பந்து வீரர்... விமரிசையாக நடந்த Audio Launch! என்ன படம்? யார் ஹீரோ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட  திரில்லர் படம் SIDDY (ஷித்தி).

ex foodball player acts Siddy படம் நடிக்கும் கால்பந்து வீரர்

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விறுவிறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. க்ரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மலையாள சினிமாவில்  இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இதில், இந்திய கால்பந்தாட்ட வீரர் I.M.விஜயன் போலீஸ் அதிகரியாக இப்படத்தில் நடித்துள்ளார். அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை   Surya film productions சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

பயஸ் ராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுலா தலங்களான கோவளம், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.  ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை அமைக்கிறார். படத்தின்  இசை வெளியீடு கொச்சினில் நடைபெற்றதை அடுத்து, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Also Read: "சிம்பு தான் நடிச்சாரு.. டூப் நடிக்கல".. STR தொடர்பான 4 பிரச்சனைகளின் Status - UshaRajendar உருக்கமான பேச்சு!

ex foodball player acts Siddy படம் நடிக்கும் கால்பந்து வீரர்

People looking for online information on SiddyAudioLaunch, SiddyMovie will find this news story useful.