வரக்கூடாது.. ஆனா வரலாம் - இது கே.ஜி.எஃப் ராக்கியின் கோட்டை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யாஷ் ரவீனா டாண்டன் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

kgf yash post for raveena tandon's entry in the cast

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் கே.ஜி.எஃப். ப்ரஷாந்த் நீல் இயக்கிய இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெறும் வெற்றிப்பெற்றது. ஶ்ரீநிதி ஷெட்டி,  அனந்த் நாக், ராமச்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கோலார் தங்க வயலை சுற்றி நடக்கும் அரசியலை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தில் ரமிக்கா சென் எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா டாண்டன் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நடிகர் யாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ரமிக்கா சென் ராக்கியின் கோட்டைக்குள் வருவதை நான் வரவேற்க விரும்ப மாட்டேன், ஆனால் யாஷின் கோட்டைக்குள் ரவீனா மேடம் வருவதை வரவேற்கிறேன். இந்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor